24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
மலையகம்

கண்டி கோடீஸ்வர பெண் கொலை: முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்ற கொலையாளியை பின்தொடரும் பொலிஸ்!

கண்டி லேக் ரவுண்ட் அம்பிட்டிய சந்தியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் ஒருவர் இனந்தெரியாத நபரால் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டுள்ளார். பட்டப்பகலில் கத்தியால் பெண்ணின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான கமனி ரணசிங்க (64) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொழிலாளர் திணைக்களத்தில் பணியாளர் தர அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

குறித்த பெண் தாக்குதலுக்குப் பின்னர் சமையல் அறைக்கு அருகில் உள்ள களஞ்சிய அறைக்கு நகர்த்தப்பட்டது வீட்டில் இரத்த தடயங்கள் மூலம் புலப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். கணவன் சிறிது காலத்தின் முன்னர் காலமானார்.

கொலைசெய்யப்பட்ட பெண் அம்பிட்டிய சந்தியில் வணிக நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்பட்ட பல கட்டிடங்களின் உரிமையாளர் ஆவார்.

பிற்பகல் 2.00 மணியளவில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது, ​​சில இரத்தக் கறைகளைக் கண்டதாகவும், இரத்தக் கறையின் தடத்தை பின்தொடர்ந்தபோது, ​​சுமார் ஐந்தடி உயரமுள்ள கருமையான ஒரு நபர் பெண்ணின் வீட்டிலிருந்து வெளியே வருவதைக் கண்டதாக அயலவர் கூறினார். அவரது கையில் இரத்தம் படிந்த கத்தி காணப்பட்டுள்ளது.

“கத்தியை வைத்திருந்த நபரும் கையில் காயங்களுடன் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டார்” என்று அவர் மேலும் கூறினார்.

தன்னை நோக்கி கத்தியை காட்டி மிரட்டிய நபர், குடும்ப பிரச்சினை என கூறியதாக அயலவர் தெரிவித்துள்ளார்.

வீட்டினுள் சென்று பார்த்த போது, பெண் குற்றுயிராக அணுங்கியபடி காணப்பட்டதாகவும், சில நிமிடங்களில் அவர் உயிரிழந்து விட்டதாகவும், அதனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயலவில்லை எனவும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அயலவர் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய நான்கு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தைத் தொடர்ந்து கொலையாளி எனக் கூறப்படும் நபர் அங்கிருந்து தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியையும் பொலிஸார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் தனது முச்சக்கர வண்டியில் கன்னோருவ பிரதேசத்திற்கு சென்றதாக முச்சக்கர வண்டியின் சாரதி தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டனில் திடீர் சுற்றிவளைப்பு: 130 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

இரத்தினபுரியில் கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 22 மரணங்கள்

Pagetamil

அமரர் பெ. சந்திரசேகரனின் 15வது நினைவு தின நிகழ்வு

east tamil

வாகன விபத்தில் இருவர் பலி

Pagetamil

அதிக சத்தத்தில் பாட்டு கேட்டதால் விபரீதம்: தந்தையும் சகோதரனும் தாக்கி மூத்த மகன் பலி!

Pagetamil

Leave a Comment