இந்த மாதம் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படும் என அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
15ஆம் திகதி விலைத்திருத்தம் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் வினவிய போது “தற்போதைய எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை” என தெரிவித்தார்.
அடுத்த விலை திருத்தம் அடுத்த மாதம் 1ஆம் திகதி பரிசீலிக்கப்படும்.
உலகச்சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வரும் நிலையில், அரசு அறிவித்தபடி விலைச்சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இம்முறை எரிபொருள் விலைகள் குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய அறிவிப்பு மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1