24 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

யாழ் பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவு!

முல்லைத்தீவு வல்லிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி இலங்கை வான்படையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான தூபியில் காலை 11:30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்பொழுது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட அகவணக்கமும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜகுமாரால் படுகொலை தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

இதன்பொழுது யாழ் பல்கலைக் கழக மாணவ ஒன்றியத்தின் பிரதிநிதிகள், மாணவர்கள், பலகலைக் கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் அரசியல் தலையீடு

east tamil

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது நினைவு தினம்

Pagetamil

கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு

east tamil

வடக்கில் மீளவும் சிங்கள குடியேற்றம்

east tamil

யாழ் மக்கள் அச்சப்படத் தேவையில்லை

Pagetamil

Leave a Comment