எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு புதிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் தகவல்களை மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்தார்.
அன்றை தினத்தில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பக்கூடிய நிரப்பு நிலையங்களும் செயலியில் குறிக்கப்படும்.
QR குறியீட்டு முறையின் கீழ், வாகன சாரதிகள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள எந்தவொரு நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருளைப் பெற முடியும். மேலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் போது எரிபொருளை பெற்றுக்கொள்ளும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.




