Pagetamil
இலங்கை

வவுனியாவில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல்!

வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தலைமையில் இன்று (13) இடம்பெற்றது.

இதன்போது விவசாயிகளின் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலப் பயிற் செய்கைக்குரிய நிலங்கள் வன இலாகாவால் எல்லையிடப்பட்டுள்ளமை, தோட்டச் செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரத்திற்கான மண்எண்ணெய் கிடைக்காமை, விவசாயிகளின் அறுவடை மற்றும் கால போக நெற் செய்கைக்கான டீசல் பங்கீடு, சிறுபோக நெல்லுக்கு உத்தரவாத விலை கிடைக்காமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

விவசாயிகளின் மேட்டு நிலப் பயற்செய்கை மற்றும் கால போக நெற் செய்கை என்பவற்றுக்கான எரிபொருளை சரியான முறையில் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் எரிபொருள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க விவசாயிகள் எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்கும் போது விவசாய தேவை என்பதை முறையாக உறுப்படுத்தி கடிதம் ஒன்றை வைத்திருத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், சிறுபோக நெற்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் விவசாயிகளிடம் இருந்து அரிசி ஆலை உரிமையாளர்களால் அரசாங்க உத்தரவாத விலையை விட குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுவதானால் அதிக விலைக்கு உரம், களைநாசினி என்பவற்றை பெற்று விவசாயம் செய்த விவசாயிகள் நட்டம் அடைவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டதுடன், இதற்கு உடனடியாக தீர்வை முன்வைக்குமாறும் கோரப்பட்டது. இதன்போது குறித்த விடயம் தொடர்பில் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையடி தீர்வைப் பெற்றுத் தருவதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தெரிவித்திருந்தார்.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைப்பாளர் டினேஸ், மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் ப.சிறி, கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், வவுனியா மாவட்ட மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment