முன்னாள் காதலன் பிரிந்து சென்றதை தொடர்ந்து, தனது தோற்றத்தில் விரக்தியுள்ள யுவதியொருவர் 15 தடவைகள் அறுவை சிகிச்சை செய்து, அமெரிக்க பிரபலம் கிம் கர்தஷியனை போன்ற தோற்றத்தை பெற்றுள்ளார்.
இப்பொழுது ஆண்கள் தன்னைச் சுற்றிசுற்றி வருவதாக திருப்தி வெளியிட்டுள்ளார்.
தென் கொரியாவை சேர்ந்த 28 வயது இளம்பெண் செர்ரி லீ. அவரது இயற்பெயர் ஹான்பியோல். பகுதி நேர ஆங்கில ஆசிரியராக பணிபுரிகிறார்.
இவர் நடிகை கிம் கர்தஷியான் போல் மாறுவதற்கு கடந்த 8 வருடங்களாக 15 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.
தனது 20 வயதில் இருந்து மேற்கொண்ட 15 அறுவை சிகிச்சைக்களிற்காகவும் இலங்கை பணத்தில் கிட்டத்தட்ட ரூ.1.80 கோடி செலவிட்டுள்ளார்.
தொடங்கிய இந்த சர்ஜரியானது தற்போது வரையில் 15 முறை செய்துள்ளதாகவும், இதற்காக 48 லட்சம் ரூபாயினை செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிம் கர்தாஷியனின் தீவிர ரசிகை என்றும், அவரை மிக பிடிக்கும் என்றும் செர்ரி லீ கூறியுள்ளார்.
கிம் கர்தஷியானை போல மாறுவதற்காக மூன்று முறை பின்னழகு அறுவை சிகிச்சையும், மார்பகங்களை பெரிதாக்க இரண்டு முறையும், ஒரு முறை கன்ன எலும்பு அறுவை சிகிச்சை மற்றும் பல முக அறுவை சிகிச்சைகள் செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைகளுக்கு பின்னர் அவரை யாரும் தென் கொரிய பெண் கூற மாட்டார்கள். உறவினர்கள் கூட, அவரை அடையாளம் காண முடியாமலுள்ளதாக தெரிவித்தார்.
“நான் எப்போதும் விரும்பிய தோற்றத்தை அடைந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
2010 களின் முற்பகுதியில் அவரது காதலன் பிரிந்து சென்றுள்ளார். தனது தோற்றமே காதலனின் பிரிவிற்கு காரணமென நினத்து, தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகியுள்ளார். இதை தொடர்ந்து தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்து, அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார்.
அறுவை சிகிச்சைகளின் பின்னர் அதிகமான ஆண்கள் தன்னை அணுகுவதாக தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொருவருக்கும் தங்கள் உடலை மாற்றியமைக்க உரிமை இருக்க வேண்டும். நீங்கள் யாருக்கும் தீங்கு செய்யாத வரை நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்.” என்றார்.
பெற்றோர்கள் தனக்கு நிதியுதவி அளித்ததால் அறுவை சிகிச்சைகளை செய்ய முடிந்தது என்று லீ கூறுகிறார்.
தான் விரும்பிய தோற்றத்தை அடைந்துவிட்டதால், மேலும் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடவில்லை என்றும் அவர் கூறினார்.