யாழ்ப்பாணம் கல்வியங்காடு கலைமகள் வீதி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் கேற்றைத் திறந்து உள்நுளைந்த திருடர்கள் வீட்டின் முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவம் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரினால் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1