‘நியூஸிலாந்து கிரிக்கெட்டில் இனவெறி பேதத்திற்கு ஆளானேன்’: சுயசரிதையில் ரோஸ் டெய்லர் பகிரங்கம்

Date:

கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் நியூஸிலாந்து அணியின் வீரர் ரோஸ் டெய்லர். இந்நிலையில், அவர் எழுதியுள்ள சுயசரிதையில் நியூஸிலாந்து கிரிக்கெட்டில் தான் இனவெறி பேதத்திற்கு ஆளானதாக குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தின் ரோஸ் டெய்லர் உலகளவில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். 38 வயதான அவர் கடந்த 2006 இல் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்தவர், 16 ஆண்டு காலம் கிரிக்கெட் களத்தில் தன் நாட்டுக்காக  விளையாடி உள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 மூன்று வகையான ஆட்டங்களிலும் நியூஸிலாந்து அணிக்காக மொத்தம் 450 போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று வகையான ஆட்டங்களிலும் சேர்த்து 18,199 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அந்த அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளில் ஓர் அங்கமாக இருந்தவர்.

இந்நிலையில், அவர் தெரிவித்துள்ள இனவெறி பேதம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனது சுயசரிதை புத்தகமான ‘Ross Taylor: Black & White இல் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு-

“டிரெஸ்ஸிங் ரூமில் சில நேரங்களில் சக வீரர்களுக்கு இடையேயான கேலிப் பேச்சு கொஞ்சம் இனவெறி பேதத்தை சார்ந்து இருக்கும். அது புண்படுத்தும் வகையிலும் இருக்கும். ஆனால் அதனை பெரிதுபடுத்துவது அந்தச் சூழலை மேலும் மோசமடைய செய்யும் என அதனை கடந்து வந்தவன் நான்.

நியூசிலாந்தில் கிரிக்கெட் விளையாட்டு வெள்ளையர்களை சார்ந்தது போல இருக்கும். எனது விளையாட்டு வாழ்க்கையில் பெரும்பகுதி நான் வெண்ணிலா லைன் அப்பில் நான் ஒரு பிரவுன் முகமாகவே பார்க்கப்பட்டேன்.

நான் ‘பாதி நல்லவன்’ என எனது சக வீரர் ஒருவர் சொல்வது வழக்கம். அவர் அப்படி சொல்வதன் அர்த்தம் என்ன என்பது உங்களுக்கு புரியாமல் போகலாம். எனக்கு தெரியும். இந்த மாதிரியான இரட்டை அர்த்தம் கொண்ட இனவெறி சார்ந்த கொமெண்டுகளை அவர்கள் வெறும் கேலிப் பேச்சாகவே பார்த்ததும் உண்டு” என டெய்லர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா விதாரண கடமையேற்பு

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக ஒஷான் ஹேவா...

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்