யக்கலமுல்லை மினுவந்தெனிய பொல்கஹகொட பிரதேசத்தில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் அடையாளம் காணப்படவில்லை.
சுமார் 35 வயதுடைய பெண் என்றும், அவர் கருப்பு பாவாடை மற்றும் சிவப்பு மேலாடை அணிந்துள்ளார்.
ஆள் நடமாட்டமற்ற வெறிச்சோடிய பிரதேசத்தில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யுவதியின் கழுத்தில் ஆழமான வெட்டுக்காயம் காணப்படுகிறது.
யுவதியின் சடலம் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை அடையாளம் காண்பதற்கு யக்கலமுல்ல பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.




