நுரைச்சோலை லக் விஜய அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் 103 பணியாளர்கள் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்பிட்டி வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சீன பிரஜைகள் என அனல் மின் நிலையத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஆலையில் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சீனர்கள், கடந்த 10 நாட்களில் சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட தொழிலாளர்கள் அவ்வப்போது 03 PCR பரிசோதனைகளை மேற்கொண்டு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மின்வாரிய அதிகாரி தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1