27.1 C
Jaffna
April 26, 2024
முக்கியச் செய்திகள்

2022 அரச செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு!

2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் செலவினம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. .

2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கத்தின் செலவு ரூ.2,796.44 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட சட்டமூலத்தின் ஊடாக அரசாங்கத்தின் செலவினம் 3,275.8 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்துக்கான ஒதுக்கீடு 13.4 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கே அதிகளவான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வசம் உள்ள அமைச்சுக்கு கிட்டத்தட்ட ரூ.734 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிதியமைச்சுக்கு ரூ.146 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ.137 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி கல்வி அமைச்சுக்கு 120 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு 124 பில்லியன் ரூபா மற்றும் வர்த்தக அமைச்சுக்கு 193 பில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சி வழக்கு மே 31 வரை ஒத்திவைப்பு: நீதிமன்றத்துக்குள் பல்டியடித்த சுமந்திரன் அணியினர்; மற்றொருவருக்கு பிடியாணை!

Pagetamil

உமா ஓயா திட்டம் திறந்து வைக்கப்பட்டது!

Pagetamil

போதை ஊசி ஏற்றப்பட்டு 10 பேரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாரா யாழ் இளம்பெண்?

Pagetamil

மாலைதீவு நாடாளுமன்ற தேர்தலிலும் சீன ஆதரவு தரப்பு அமோக வெற்றி!

Pagetamil

2 வருடங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய 25.5 இலட்சம் பேர்: அதிர்ச்சித் தகவல்!

Pagetamil

Leave a Comment