திருமணத்திற்கு மறுத்த காதலனை கொன்று ட்ராலி பேக்கில் அடைத்து எடுத்து வந்த பெண்!

Date:

திருமணத்துக்கு மறுத்த காதலனைக் கொலை செய்து ட்ராலி பேக்கில் வைத்து ரயில் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற பெண் கைதுசெய்யப்பட்டார்.

டெல்லி அருகிலிருக்கும் காஜியாபாத்தில் அதிகாலை 2 மணிக்கு பெண் ஒருவர் இழுத்துச் செல்லக்கூடிய ட்ராலி பேக் ஒன்றை மிகவும் போராடி சாலையில் இழுத்துச் சென்றுகொண்டிருந்தார். அந்த வழியாக ரோந்து வந்த போலீஸார் அந்தப் பெண்ணிடம் `எங்கு செல்ல வேண்டும்?’ என்று கேட்டனர். `ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டும்’ என்று அந்தப் பெண் கூறினார். உடனே `நாங்களே உங்களை ரயில் நிலையத்தில் விட்டுவிடுகிறோம்’ என்று போலீஸார் தெரிவித்தனர். ஆனால் அந்தப் பெண் போலீஸாரின் உதவியை ஏற்காமல் சாலையில் தொடர்ந்து 200 மீட்டர் தூரத்துக்கு நடந்து சென்றார். அவருக்கு ஆட்டோ ரிக்‌ஷா எதுவும் கிடைக்கவில்லை. போலீஸார் மீண்டும் அந்தப் பெண்ணிடம், அவர் ரயில் நிலையத்துக்குச் செல்வதற்கு உதவுவதாகத் தெரிவித்தனர்.

அதிகாலை 2 மணி, ட்ராலி பேக்கை இழுத்துச் சென்ற பெண்; ட்ராலியின் உள்ளே? -உதவிக்கு வந்த போலீஸ் அதிர்ச்சி
ஆனால் மீண்டும் அந்த உதவியை அந்தப் பெண் மறுத்ததால், `நீங்கள் எந்த ரயிலில் பயணம் செய்ய வேண்டும்?’ என்று கேட்டனர். அதற்கு அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. விசாரித்தபோது, அவரிடம் ரயில் டிக்கெட்டும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரின் பேக்கில் என்ன இருக்கிறது என்று சோதித்தபோது அதிர்ச்சியைடந்தனர். பேக்குக்குள் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டிப் பிடித்த போலீஸார் கைதுசெய்தனர்.

தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. இது குறித்து போலீஸ் அதிகாரி முனிராஜ் கூறுகையில், ”ட்ராலியை இழுத்து வந்த பெண் பிரீத்தி சர்மா, தன்னுடைய கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்தார். அவர் பெரோஸ் (23) என்ற வாலிபருடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துவந்தார். பிரீத்தி சர்மா தன்னுடன் சேர்ந்து வாழ்ந்தவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ஆனால் வேற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்று பெரோஸ் கூறி திருமணத்தைத் தவிர்த்து வந்தார்.

சம்பவத்தன்று மீண்டும் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி பிரீத்தி நிர்ப்பந்தம் செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே பெரோஸ் பிரீத்தியை நடத்தை சரியில்லாதவள் என்று கூறினார். இதனால் கோபத்தில் பிரீத்தி வீட்டிலிருந்த ரேஸர் பிளேடை எடுத்து பெரோஸ் கழுத்தை அறுத்திருக்கிறார். அதில் இறந்துபோன பெரோஸின் உடலை மறைக்க கடையிலிருந்து மிகப்பெரிய ட்ராலி பேக் ஒன்றை வாங்கிவந்தார். அந்த பேக்கில் உடலைவைத்து ரயில் நிலையத்துக்குக் கொண்டு சென்று ஏதாவது ஒரு ரயிலில் அந்த பேக்கைப் போட்டுவிடத் திட்டமிட்டிருந்தார்” என்று தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பிக்மீ சாரதியிடம் கொள்ளையடித்தவர்கள் கைது!

இன்று காலை சமூக வலைதளங்களில் குற்றக் காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து பரவலான...

யாழ்- தீவுகளுக்கான படகு பயண நேர மாற்றம்

யாழ்ப்பாணம் எழுவைதீவு மற்றும் அனலைதீவு பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவைகளில் நாளை...

3வது மனைவியின் கொடுமை தாங்க முடியவில்லை… என்னை கருணைக்கொலை செய்யுங்கள்: கதறும் கணவன்!

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்