29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

அரசியல் மாற்றம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்: ஜனா எம்.பி!

அரசியல் மறுசீரமைப்பு தமிழ் மக்களை இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஜனாதிபதி முறைமை, பாராளுமன்றம் குறித்தாக இருந்தாலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வை நோக்கியதாக அரசியல் மறுசீரமைப்பு அமைய வேண்டும். தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்ததல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த பின்னரே புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார பங்களிப்பு கிடைக்கும் என்பதை சிங்கள தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

இன்று (10) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

தென்னிலங்கை நிலவரத்தின் அடிப்படையில் வடக்கு கிழக்கு விவசாயம் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை பிரகடன உரையில், வடக்கு கிழக்கு மக்களிற்கு அரசியல் தீர்வு வழங்குவேன் என ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டதை போலவே தோன்றுகிறது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாக முக்கிய காரணமாக உள்ள இலங்கை இனப்பிரச்சனையை சிங்கள தலைவர்கள் பார்க்கும் விதம் விநோதமானது. இப்போது ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நாட்டிற்குசர்வகட்சி ஆட்சியே தேவை.

தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளவை நில அபகரிப்பை நிறுத்த வேண்டும், அபகரித்த நிலங்களை விடுவிக்க வேண்டும், வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும், தமிழ் மக்களின்பாரம்பரிய நிலமான வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் போன்றவையே.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் நடந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கு இதுவரை தீர்வில்லை. சுதந்திரம் அடைந்த காலம் முதல் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே பார்க்கப்பட்டார்கள்.

1949 ஆம் ஆண்டில் டி.எஸ்.சேனநாயக்க கிழக்கு மாகாணத்தில் கல்லோயா திட்டத்தின் மூலம் கிழக்கில் சிங்கள குடியேற்றத்தை நடைமுறைப்படுத்தினார். 1971ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் 0.5 வீதமான சிங்களவர்களே குடியிருந்தனர். திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களினால் இன்று அது 24 வீதமாக உயர்ந்துள்ளது.

பண்டா செல்வா ஒப்பந்தத்தின் போது ஜேஆர், பௌத்த பிக்குகளுடன் கண்டி யாத்திரை சென்றார். மீண்டும்  டட்லி – செல்வா ஒப்பந்தத்தை சிறிமாவோ எதிர்த்தார். 2000ஆம் ஆண்டில் சந்திரிகாவின் காலத்தின் நீலன் திருச்செல்வம், ஜி.எல்.பீரிஸ் போன்றவர்களினால் தீர்வுப்பொதி உருவாக்கப்பட்டது. அது இன்று வரை நல்ல தீர்வாக கூறுகிறார்கள். இன்றைய ஜனாதிபதி, அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் அனேகமாக போராட்ட இயக்கங்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்தன. 1989 தேர்தலில் பங்குபற்றியிருந்தோம். இப்போதைய பிரதமரின் கட்சி அப்போது 3 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்தார். நாம் தமிழீழ விடுதலை இயக்கமாக அவரது வீட்டுக்கு சென்று அரசியல் தீர்வு பற்றி பேச்சுக்கள் நடத்தியிருந்தோம்,.

நல்லாட்சிக்காலத்தில் தீர்வு முயற்சிகள் தோல்வியடைந்தன. உங்களது ஜனாதிபதி காலத்தில், நீங்கள் கூறியுள்ள அரசியல் மாற்றம் தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்ததல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த பின்னரே புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார பங்களிப்பு கிடைக்கும் என்பதை சிங்கள தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இல்லாது போனால், புலம்பெயர் தமிழர்களை உதவிக்கு அழைக்கும் முயற்சி தோல்வியடையும்.

பொருளாதார தீர்விற்கு பல திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்தார். அவை நடைமுறைக்கு வர வேண்டும்,  மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

போராட்டக்காரர்களால் உருவாகியுள்ள இந்த மாற்றத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆனால் போராட்டக்காரர்களை கைது செய்வதும், தடுத்து வைப்பதும், கடத்துவதும் கண்டனத்திற்குரியதாகும். இந்த கைதுகள் நிறுத்தப்பட வேண்டும்.

போராட்டங்களை நடத்துவது ஜனநாயக உரிமை என கூறிக்கொண்டு அடக்குமுறை செய்வது கண்டனத்திற்குரியது.

வடக்கு கிழக்கை பொருத்தவரை மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு என உற்பத்தி பொருளாதாரம் காணப்படுகிறது.  வடக்கில் கிழக்கு, வெங்காய உற்பத்திகள் சிறப்பாக நடக்கிறது. அங்கு அறுவடை நடக்கின்ற போது வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்வதும், பொலன்னறுவை அநுராதபுர விவசாயிகளின் அட்டவணைக்கு அமைய எமது விவசாயிளிற்கு உரம் வழங்குவதும், அறுவடை காலத்திற்கு ஏற்ப நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்வதும், விலை நிர்ணயம் செய்வதும் பாரபட்சமான நடவடிக்கைகள். இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இன்று யூரியா 65,000 மெட்ரிக் தொன் வரவிருந்து, தற்போது 40,000 மெட்ரிக் தொன் வந்துள்ளது. அதில் மட்டக்களப்பிற்கு 216 மெட்ரிக் தொன் மாத்திரமே கொடுக்கப்பட்டுள்ளது. கிழக்கில் விதைப்பு முடிந்து விட்டது, அனுராதபுரம், பொலன்னறுவையில் விதைக்கப்படுவதாக அதற்கான காரணம் கூறப்படுகிறது.

ஆனால் அடுத்த உரம் வரும் போதும் கிழக்கில் பெரும்போகம் ஆரம்பித்து விடும். அடுத்த முறையாவது கிழக்கு விவசாயிகளிற்கு உரிய முறையில் யூரியா வழங்கப்பட வேண்டும்.

அரசியல் மறுசீரமைப்பு தமிழ் மக்களை இலக்காக கொண்டிருக்க வேண்டும். ஜனாதிபதி முறைமை, பாராளுமன்றம் குறித்தாக இருந்தாலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வை நோக்கியதாக அரசியல் மறுசீரமைப்பு அமைய வேண்டும். பெரும்பான்மை சமூகத்தையும், பௌத்த தேசியவாத மேலாண்மையை கொண்டதாக அமைந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் நிலைமைக்கு மாறாகவே அமையும்.

இன்று பெற்றோலுக்கு, எரிவாயுவிற்கு மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு கொடுப்பதுடன், தமிழ் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையும் நடக்கிறது. கடந்த 3ஆம் திகதி இரவு கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்னாள் சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் த.சுதர்சனின் கழுத்தில் கைத்துப்பாக்கியை வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் மிரட்டியுள்ளார். இந்த நிலைமை மாற வேண்டும்.

கோட்டாபய ராஜபக்சவின் மடத்தனமான நடவடிக்கையால் நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அவர் தற்போது இருக்க நாடில்லாமல் உள்ளார். இலங்கை நெருக்கடியில் இந்தியாவே கைகொடுத்தது. பல உதவிகளை செய்தது. ஆனால் இன்று என்ன நடக்கிறது. பூகோள அரசியலில் இலங்கையை பகடைக்காயாக சீனா பயன்படுத்துகிறது. நாளை வரவுள்ள அந்த கப்பல் பாதுகாப்பு அச்சுறுத்தலென இந்தியா கூறியுள்ளது. அயல்நாடான இந்தியா எமக்கு உதவி வரும் நிலையில். அதை பகைக்கக்கூடாது, அதனுடன் அனுசரணையாக நடக்க வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment