கல்முனை வலய கல்வி பணிப்பாளராக எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமனம்!

Date:

கல்முனை வலய கல்வி பணிப்பாளராக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரிடமிருந்து நியமன கடிதங்கள் கிடைக்க பெற்றிருக்கின்றது.

மருதமுனையை சேர்ந்த எம்.எஸ் சஹதுல் நஜீம், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி ஆவார்.

விஞ்ஞான பட்டதாரியான நஜீம் விஞ்ஞான முதுமாணி கல்வி முதுமாணிப் பட்டங்களை பெற்றுள்ளார். 15 வருட கல்வி நிர்வாக சேவை யிலுள்ள நஜீம் நாளை (10) முதல் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி ஏற்கிறார் .

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கான நேர்முகப் பரீட்சை கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி திருகோணமலையிலுள்ள மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. நேர்முக தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி இந் நியமனம் இடம்பெற்றது. 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி இலங்கை கல்வி கல்வி நிர்வாக சேவையிலே இணைந்து கொண்ட அவர், கடந்த 2019 மூன்றாம் மாதம் 12ஆம் திகதி தரம் 1 க்கு பதவி உயர்த்தப்பட்டார் .

சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்கு 2014 மார்ச் மாதம் மூன்றாம் திகதி நியமிக்கப்பட்டார். சம்மாந்துறை வலயத்தில் அதி கூடிய 8 அரை வருடங்கள் சேவையாற்றி நாளை கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி ஏற்கிறார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்