கோட்டாவின் தவறாக முடிவால் நாட்டிற்கு ஏற்பட்ட பாரிய இழப்பு: நீதிமன்றத்தில் வெளியான தகவல்!

Date:

சீனி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதமாக குறைத்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் ஏறக்குறைய 1600 கோடி ரூபா வரியை இழந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையை கொழும்பு மேலதிக நீதவான் என்.சி. இளங்கசிங்க முன்னிலையில் நேற்று (08) நடைபெற்ற போது, இந்த தகவல் தெரிய வந்தது.

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு கிலோ சீனிக்கான 50 ரூபா விசேட பண்ட வரி 25 சதமாக குறைக்கப்பட்டதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 1600 கோடி ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்