இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அவர் ரூ.500,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
ஜோசப் ஸ்டாலினின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதவான் பிணை உத்தரவை பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறி மே 28ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஸ்டாலின் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஸ்டாலினை கடந்த வாரம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது, ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1