சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக 40 அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும்படி கோருகிறது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தனியார் மயப்படுத்தும் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் போது, எதிர்க்கட்சியாக பொறுப்புடன் செயற்படுவோம் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியின் அடையாளத்தை பாதுகாத்துf் கொண்டு, அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்க முடியும் எனத் தெரிவித்த அவர், அதற்காக அரசாங்கத்திற்குள் பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டார்.
இன்றைய அரசாங்கம் ராஜபக்சக்களின் குப்பை லொறி என்பதால் அதில் இணைய வேண்டிய அவசியமில்லை எனவும் .லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.