25 C
Jaffna
January 8, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 2 பேர் விடுதலை!

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டத்தில் பள்ளி முனை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் தள்ளாடி இராணுவ முகாம் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருமாக இருவர் பயங்கர வாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தனது உடமையில் பீரங்கிக்கு பயன்படுத்தும் திரியை வைத்திருந்தார் என்ற அடிப்படையில் பள்ளிமுனை யை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு குறித்த பீரங்கி திரியை வழங்கிய குற்ற சாட்டில் தள்ளாடி இராணுவ முகாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் கடந்த 2019 ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இருவரையும் விடுவிக்க கோரி அல்லது பொலிஸார் ஊடாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி சட்டத்தரணி எஸ்.டினேசன் கடந்த இரண்டு வருடங்களாக சமர்ப்பனங்கள் மேற்கொண்டு வந்த நிலையில் நீண்ட காலமாக அவர்களுக்கு பிணை நிராகரிக்கப்பட்டு இருந்ததுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்று அவர்களை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சட்டத்தரணி எஸ்.டினேசன் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்த தோடு நேரடியாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த வழக்கு காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில் இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய தயார் நிலையில் இருந்த பொழுது குறித்த வழக்கு தொடர்பான விபரங்களை பரிசீலித்த சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த இருவரையும் விடுவிப்பதற்கான கடிதத்தை மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு நேற்றைய தினம்(4) வியாழக்கிழமை அனுப்பி வைத்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(5) குறித்த வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இருவரையும் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்

east tamil

தனியார் பேருந்து வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Pagetamil

கிளிநொச்சி பேரூந்து நிலையத்திலிருந்து வெளியேறும் மலக் கழிவை உடனடியாக தடுக்க தவறின் சட்ட நடவடிக்கை – கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி

Pagetamil

அரசியல் தீர்வைப் பற்றிப் பற்றிய கதை (விடல்)கள்

Pagetamil

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் – மீனவர்கள் எதிர்ப்பு

east tamil

Leave a Comment