ரணில் விக்ரமசிங்கவின் 50 வருட அரசியல் அனுபவம் அவரது கொள்கை விளக்க உரையில் வெளிப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசபுத்திரன் சாணக்கியன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 3ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசின் கொள்கை விளக்க உரையை ஆற்றியிருந்தார்.
இதன்பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தேனீர் விருந்து வழங்கப்பட்டது.
அங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சென்று கைலாகு கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், ரணிலின் கொள்கை விளக்க உரை சிறந்தது என பாராட்டு தெரிவித்தனர்.
இதன்போது, சாணக்கியன், ரணிலின் 50 வருட அரசியல் அனுபவம் அந்த உரையில் வெளிப்பட்டதாக ரணிலிடம் தெரிவித்தார்.
ரணில் புன்முறுவலுடன் அதனை ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர், கூட்டமைப்பின் ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சாவகாசமாக ஜனாதிபதி உட்கார்ந்து பல விடயங்களை பேசினார். இதன்போது, என்னை எதிர்ப்பதாக வெளியில் சில கூட்டமைப்பு எம்.பிக்கள் காண்பித்தாலும், உண்மையில் இப்பொழுது கூட்டமைப்பில் யாரும் எனக்கு எதிராக இல்லை, அனைவரும் என்னை ஆதரிக்கிறீர்கள். நாம் இணைந்து முன்னோக்கி செல்ல வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.