‘double D’ அளவுள்ள மார்பகங்கள் மற்றும் புன்னகையுடன் பணியாற்றக் கூடிய ஊழியர்களைத் தேடுவதாக மதுபானச்சாலையில் வைக்கப்பட்ட விளம்பரம் சமூக ஊடகங்களில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
நியூசிலாந்தின் ஹோகிடிகா நகரத்தில் அமைந்துள்ள ஸ்டம்பர்ஸ் பார் & கஃபே என்ற விடுதி, ‘ஆண்களும் விண்ணப்பிக்கலாம்’ என்று கூறியது.
“தேவை: பகுதி நேரப் பணியாளர்கள். உள்ளே விண்ணப்பிக்கவும். ‘double D’ மார்பகங்கள் இருக்க வேண்டும்.” விண்ணப்பதாரர்களுக்கு ‘சிறந்த புன்னகை மற்றும் நல்ல அணுகுமுறை’ தேவை என்று விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, கடுமையாக கண்டிக்கப்பட்டு வருகிறது.
மதுபானச்சாலையின் யன்னலில் அந்த விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது.
எனினும், சிலர் அது நகைச்சுவைக்காகவோ அல்லது கவனத்தை ஈர்க்கும் விளம்பர முயற்சியாகவோ செய்யப்பட்டிருக்காம் என கூறினர்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2022/08/2022-08-03-1.jpg)
ஆயினும், நியூசிலாந்தின் உள்ளூர் அரசியல்வாதிகள் பலரும் இதனை கண்டித்துள்ளனர். நமது சமூகத்தின் மதிப்பை இது பிரதிபலிக்கவில்லையென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.