கத்தியை காட்டி மிரட்டி எரிபொருள் வரிசையில் முன்னுக்கு சென்ற ரௌடிகள்: வடமராட்சியில் ‘பகீர்’ சம்பவம்!

Date:

யாழ்ப்பாணத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைகளில் குண்டர் கும்பல்கள் ஆதிக்கம் செலுத்துவதாக பரவலாக முறைப்பாடுகள் எழுந்து வருகிறது.

எரிபொருள் பெற்றுக்கொள்வதெனில் பல மணித்தியாலங்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை தற்போது காணப்படுகிறது. முதல்நாள் இரவே வாகனங்களை வரிசையில் நிறுத்தினாலே மறுநாள் எரிபொருள் பெறலாமென்ற நிலைமை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தின் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைகளில் குண்டர் குழுக்களின் ஆதிக்கம் பற்றிய முறைப்பாடுகள் அதிகரித்து வருகிறது.

வரிசைகளில் மக்கள் பல மணித்தியாலங்களாக நிற்கும் போது, எரிபொருள் நிரப்பும் நேரம் நெருங்கும் போது, திடீரென குண்டர் குழுக்கள் வரிசைகளிற்குள் புகுந்து கொள்கிறார்கள்.

அதை யாரும் தட்டிக்கேட்க முயன்றால் அச்சுறுத்தலிற்குள்ளாகிறார்கள்.

வடராட்சி, மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைகளில், அண்மைய பிரதேசமொன்றில் உள்ள குண்டர்குழுவால் தொடர்ந்து பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகி வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலைமையை கட்டுப்படுத்த கடமையிலுள்ள இராணுவத்தினர் மட்டுமே ஓரளவு செயற்படுவதாகவும், ஏனைய தரப்பினர் இந்த நிலைமையை கண்டுகொள்வதில்லையென மக்கள் குற்றம்சுமத்துகின்றனர்.

சில நாட்களின் முன்னர், வரிசைக்குள் புகுந்த இந்த கும்பலிற்கு வரிசையில் நின்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வரிசையில் தாங்கள் நின்றுவிட்டு சென்றதாக பொய் கூறிய அந்த கும்பல், சிறிய கத்திகளை எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டி, வரிசையில் முன்னுக்கு சென்று எரிபொருள் பெற்றதாக வரிசையில் நின்ற மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

(மேலே இணைக்கப்பட்டது சித்தரிப்பு படம்)

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்