கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எனக்கு எதிராக வாக்களிக்கவில்லையென்பது எனக்கு தெரியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் இன்று நடந்த கலந்துரையாடலில் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.
இன்றைய சந்திப்பின் ஒரு கட்டத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி எம்.ஏ.சுமந்திரன், ‘தமிழ் தேசிய கூட்டமைப்பு உங்களிற்கு எதிராக வாக்களித்திருந்தாலும்..’ என கூறிய போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைமறித்து, ‘இப்படியல்ல… கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எனக்கு எதிராக வாக்களிக்கவில்லை. சிலர் எனக்கும் ஆதரவாக வாக்களித்தனர் என்பது தெரியும்’ என்றார்.
இதை சுமந்திரன் மறுத்து, கட்சி தீர்மானத்தின்படியே அனைவரும் வாக்களித்தனர் என்றார்.
எனினும், ஜனாதிபதி அமை மறுத்தார். ‘இல்லை… தமிழ் மக்களின் நன்மை கருதி உங்களில் சிலர் எனக்கு ஆதரவாக வாக்களித்தனர்’ என்றார்.
இதன்போது, த.சித்தாரர்த்தன் குறுக்கிட்டு, ‘நடந்தது இரகசிய வாக்கெடுப்பு. யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது உங்களிற்கு தெரியுமெனில், இந்த முறைமையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றுதானே அர்த்தம்’ என்றார்.
ஜனாதிபதி சிரித்து நிலைமையை சமாளித்தார்.