எத்தனை காலம் ஆனாலும் விடமாட்டோம்; எங்கு ஓடினாலும் தப்ப முடியாது என்று அல் கொய்தா அமைப்பின் தலைவர் அய்மான் அல்- ஜவாஹிரி கொல்லப்பட்டது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கருத்து தெரிவித்துள்ளார்.
அல்-கொய்தா அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடன் 2011இல் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார். அதன்பின் அல்-கொய்தா அமைப்பை வழிநடத்தி வந்தார் அல்- ஜவாஹிரி. இவர் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவர், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பதுங்கியிருந்தார். ட்ரோன் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
காபூலின் புறநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஜவாஹிரி தங்கியுள்ளார். வீட்டு பல்கனியில் அவர் நின்ற போது, அமெரிக்க ட்ரோன்கள் மூலம் இரண்டு ஹெல் ஃபயர் ஏவுகணைகள் வீசப்பட்டன. அதி நவீன ஆயுதங்கள் மூலம் அமெரிக்கா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர், “அல் ஜவாஹிரி பதுங்கியிருக்கும் இடத்தை அறிந்துவிட்டதாக தகவல் வந்ததும். அவரை அழிக்கும் நடவடிக்கைக்கு நான் அனுமதி கொடுத்தேன். அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதால் அமெரிக்காவில் செப்டம்பர் 11இல் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 3000 பேரின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
The United States continues to demonstrate our resolve and our capacity to defend the American people against those who seek to do us harm.
Tonight we made clear:
No matter how long it takes.
No matter where you try to hide.
We will find you.— President Biden Archived (@POTUS46Archive) August 2, 2022
தொடர்ந்து ருவிற்றரில் தனது கருத்தைப் பதிவிட்ட ஜோ பிடன், “அமெரிக்காவுக்கு தீங்கு இழைப்பவர்களிடமிருந்து அமெரிக்க மக்களைக் காப்பதற்காக நாங்கள் எதை செய்வோம். இன்றிரவு நாங்கள் அதை நிரூபித்துள்ளோம். எவ்வளவு காலம் ஆனாலும் சரி
எங்கு நீங்கள் பதுங்கினாலும் சரி. நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.




