4 மாதங்களின் பின் அமெரிக்க – சீன தலைவர்கள் தொலைபேசி உரையாடல்!

Date:

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சீன ஜனாதிபதி சி சின்பிங்கும் தங்களது நாடுகளின் சர்ச்சைக்குரிய உறவுகளைப் பற்றி 2 மணிநேரத்துக்கு மேல் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்டு தலைவர்களும் 4 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாகத் தொலைபேசி வழி உரையாடியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே நேரடிச் சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்துப் பேசப்பட்டதாக மூத்த அமெரிக்க நிர்வாகி அதிகாரி தெரிவித்தார்.

அதன் சாத்தியத்தை ஆராயும்படித் தத்தம் குழுக்களுக்குத் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரு நாட்டு தலைவர்களிற்கும் இடையே நடந்த உரையாடல் நேரடியாகவும் வெளிப்படையாகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் தைவான் விவகாரம் சர்ச்சைக்குரியதாக நீடிக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் தைவானுக்குச் செல்லவிருப்பதாக வந்துள்ள தகவல்களால் புதிய பதற்றம் உருவாகியிருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்