28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

காலிமுகத்திடல் போராட்ட பங்களிப்பை முடித்துக் கொள்கிறோம்: கறுப்புத் தொப்பி இயக்கம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த கறுப்புத் தொப்பி இயக்கம், காலி முகத்திடலுக்கான தனது பங்களிப்பை இன்று முதல் உத்தியோகபூர்வமாக நிறைவு செய்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து, காலிமுகத்திடல் போராட்டத் தளத்தை ஆக்கிரமிப்பு செய்வதில் எந்தக் காரணமும் இல்லை என அந்த இயக்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

‘காலி முகத்திலிற்கு அப்பால்’ பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, தமது எதிர்ப்பின் அடுத்த கட்டத்திற்கு ‘அரகலய 4.0’ என பெயரிட்டுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் விபரம்:

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான திறமையற்ற ஆட்சிக்கு பதிலளிக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி கொஹுவல சந்தியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை கறுப்புத் தொப்பி இயக்கம் ஆரம்பித்தது.

சமூக-பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறுவதை நாங்கள் அவதானித்ததால், #GotaGoHome சமூக ஊடகப் பிரச்சாரத்தின் அடிப்படையில் வன்முறையற்ற மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டோம்.

இவ்வாறானதொரு அமைதியான நுண் எதிர்ப்புப் போராட்டம் கொஹுவளையில் இருந்து ஆரம்பித்து கொழும்பின் ஏனைய பகுதிகளுக்கும் புறநகர்ப் பகுதிகளுக்கும் விரிவடைந்தது. நிலவும் நெருக்கடிகளால் மக்கள் தொடர்ந்து சுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், நாடு முழுவதும் நடைபெற்ற நுண்ணிய போராட்டங்கள் மூலம் #GotaGoHome முழக்கம் உண்மையாக்கப்பட்டது.

இந்த அகிம்சை எதிர்ப்பு மாதிரியானது, மே 9 க்குப் பிறகு தொடங்கிய ‘சமையலறை புலம்பல்’ என்ற தொடர் போராட்டத்தின் மூலம் நடுத்தர வர்க்கப் பிரிவுகளில் பெண்களை ஈர்ப்பதில் வெற்றி பெற்றது.

கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டம், அகிம்சை வழியிலான போராட்டத்தின் மூலம் மக்கள் எவ்வாறு தமது கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தது.

‘வீட்டிற்குச் செல்லுங்கள்’ பிரச்சாரத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்வதில் எமது தலைமுறையினர் அடையாளப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளனர்.

அந்தவகையில் ‘கோட்டா வீட்டுக்குப் போ’ என்ற கோஷம் யதார்த்தமாகிவிட்டது.

அடுத்த கட்டமாக, ‘கோட்டா வீட்டுக்குப் போ’ பிரச்சாரத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றுவது மற்றும் இந்த எதிர்ப்புக்கு இந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஒரு புதிய கட்டம் தேவைப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி முதல் மே 12ஆம் திகதி வரை காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்ட களத்தில் பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடலின் பின்னர் உருவாக்கப்பட்ட ‘காலி முகத்திடலுக்கு அப்பால்’ பிரகடனத்தில் இந்தக் கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த சீர்திருத்தங்களை கொண்டு வருவதையே இதன் மூலம் எங்களது எதிர்ப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் இந்த நோக்கத்தை அடைய சிவில் சமூகம் மற்றும் அரசியல் இயக்கங்களுடன் கைகோர்க்க நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

இதன் மூலம் இந்த கட்டத்தை ‘அரகலய 4.0’ என்று பெயரிடுகிறோம். காலிமுகத்திடல் போராட்டத் தளத்தின் முதன்மையான நோக்கம் நிறைவேறியுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறான போராட்டம் பரந்த சமூக அரசியல் வெளியில் விரிவடைந்துள்ளதுடன், காலி முகத்திடலுக்கான எமது பங்களிப்பை இன்றிலிருந்து முடித்துக் கொள்கின்றோம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

Leave a Comment