24.8 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

ரணில் வீடு எரித்தவர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி சொத்துக்களுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இனங்காணப்பட்டுள்ள 14 பேரின் அடையாளத்தை கண்டறிய குற்றப் புலனாய்வு திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த 14 பேரின் புகைப்படங்களை காவல்துறை தலைமையகம் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான நெருக்கமான காணொளி காட்சிகளில் இருந்து இந்த சம்பத்துடன் தொடர்புடையவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் கொழும்பு வந்த செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகங்கள் என்பனவற்றை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னர், இரவோடு இரவாக ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்குள் இன்னுமொரு குழுவினர் வலுக்கட்டாயமாக அத்துமீறி நுழைந்து,   சொத்துக்களை சேதப்படுத்தி அழித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர், சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 0718594950, 0718594929, 0112422176 ஆகிய இலக்கங்களுக்கு வட்ஸ்அப் ஊடாகவோ அல்லது அழைப்பிலோ தெரிவிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கட்டைக்காடு குப்பை மேடாக மாறியதால் மக்கள் அவதி

east tamil

யாழ் பல்கலைக்குள் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்… இரவில் தொங்கும் பெண்களின் உள்ளாடைகள்- கலைப்பீடாதிபதி பதவிவிலகலுக்கு இதுதான் காரணமா?

Pagetamil

முகமாலையில் ரயில் மோதி இரண்டு மாடுகள் உயிரிழப்பு

east tamil

கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

east tamil

ஒரே நாளில் 33 தமிழக மீனவர்கள் கைது

east tamil

Leave a Comment