25.4 C
Jaffna
January 18, 2025
Pagetamil
கிழக்கு

பணிப்பெண்ணுக்கு பிறந்த குழந்தை கொலை: வைத்தியருக்கு விளக்கமறியல்!

வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பிரசவித்த சிசு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு நகரில் கைது செய்யப்பட்ட வைத்தியர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் மேல்மாடி வீதியில் வீடு ஒன்றில் வாடகைக்கு பெற்று தங்கியிருந்து கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவரை தனது வீட்டு வேலைக்காக அழைத்து வந்திருந்தார். வைத்தியருக்கும், பணிப்பெண்ணுக்குமிடையில் கள்ளக்காதல் ஏற்பட்டு, 2017 மார்ச் 26 ம் திகதி பணிப்பெண்ணுக்கு ஆண்பிள்ளை ஒன்று பிறந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையை சீலையால் சுற்றி வீட்டின் கிணற்றினுள் வீசியுள்ளார். பணிப்பெண்ணுக்கு தொடர்ந்து இரத்த போக்கு ஏற்பட்டதால் மார்ச் 26ம் திகதி மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மார்ச் 31 ம் திகதி தனது கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாகவும் தண்ணீரில் நாற்றம் வீதுவதாக பொலிஸாருக்கு வைத்தியர் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் கிணற்றை சோதனையிட்டபோது கிணற்றில் இருந்து சிசு ஒன்றை மீட்டதுடன் பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது குறித்த பணிப்பெண் குழந்தை தனக்கும் வைத்தியருக்கும் பிறந்தாகவும் வைத்தியர்தான் வீட்டில் மகப்பேற்றை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் சிசுவை தான் கிணற்றில் வீசியதாக பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என வைத்தியர் தெரிவித்த நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய குழந்தையின் இரத்த மாதிரியும் வைத்தியரின் இரத்த மாதிரியையும் பெற்று அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மரபணு பரிசோதனை முடிவில், குழந்தை வைத்தியருக்கு பிறந்துள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று முன்தினம் கண்டி வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் வைத்தியரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து, தனக்கு பிறந்த குழந்தையை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பணிப்பெண் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் ஏற்கனவே அவருடைய சகோதரியின் கணவருக்கு பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சவுதியில் உயிரிழந்த மூதூர் பெண்

east tamil

திருகோணமலையில் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் குறித்த ஊழியர் விழிப்புணர்வு செயலமர்வு

east tamil

காட்டு யானை உயிரிழந்தது தொடர்பான விசாரணை

Pagetamil

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளுக்கு புதிதாக வைத்தியர்கள் நியமனம்

east tamil

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

east tamil

Leave a Comment