திங்கட்கிழமை கனடாவின் வான்கூவருக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். தாக்குதல்தாரியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வான்கூவரில் இருந்து தென்கிழக்கே 30 மைல் தொலைவில் உள்ள லாங்லி நகரின் பல்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். சுமார் 6 மணித்தியாலங்களின் பின் சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வீடற்ற நபர்களை குறிவைத்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
லோகன் அவென்யூ மற்றும் குளோவர் சாலையில் லாங்லி நகரப் பேருந்து வளையத்தில் ஒருவர் இறந்து கிடந்தார். அருகிலுள்ள க்ரீக் ஸ்டோன் பிளேஸ் ஆதரவு வீட்டுத் திட்டத்தில் மற்றொரு நபர் இறந்து கிடந்தார்.
203A தெரு மற்றும் ஃப்ரேசர் நெடுஞ்சாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த ஒரு பெண்ணையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
காலை 5:45 மணியளவில், பொலிசார் ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டு, 200 தெரு மற்றும் லாங்லி பைபாஸ் அருகே வில்லோபுரூக் மாலுக்கு வெளியே அவரைக் கண்டுபிடித்தனர். பொலிசார் பின்னர் சந்தேக நபரை சுட்டுக் கொன்றனர். ஆனால் எந்த நேரத்தில் என்று கூறவில்லை.
சந்தேக நபர் கருமையான முடி, பழுப்பு நிற கார்ஹார்ட் கவரல்கள் மற்றும் சிவப்பு லோகோவுடன் நீலம் மற்றும் பச்சை நிற உருமறைப்பு டி-ஷர்ட் கொண்ட வெள்ளை மனிதர் என முதல் அவசர எச்சரிக்கையில் விவரிக்கப்பட்டதாக கனடிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.