26 C
Jaffna
January 8, 2025
Pagetamil
சினிமா

நான் உன் பொண்டாட்டியா?… ஆடையில்லாமல் நடிச்சா உனக்கென்ன?: பயில்வான் ரங்கநாதனுடன் நடுவீதியில் ரேகா நாயர் மோதல்!

பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த ரேகா நாயர், தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதனுடன் நடு வீதியில் சண்டையிட்டார்.

இரவின் நிழல் திரைப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்த தன்னை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனுடன் நடிகை ரேகா நாயர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஆர்தர் வில்சன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.

சிங்கிள் ஷாட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து திரையுலகினர், ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதற்கு இணையாக இந்த திரைப்படத்தால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன. உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று பார்த்திபன் இதற்கு விளம்பரம் செய்து வரும் நிலையில், அது தவறான தகவல் என்று விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

அதேபோல் இந்த படத்தில் நடித்த பிரிகிடா சேரி மக்கள் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என்று பேசியதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பிரிகிடாவுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரை கைது செய்யவும் வலியுறுத்தினர்.

நடிகர் பார்த்திபன் இந்த விவகாரத்தில் தலையிட்டு மன்னிப்பு கோரியதால் அந்த பிரச்சனை ஓய்ந்தது.

மேலும் இப்படத்தில் நடிகைகள் பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் அரை நிர்வாணமாக நடித்திருப்பதை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.

குடும்பத்துடன் இதை பார்க்க முடியாது என்றும் பலர் தெரிவித்தனர். அதேநேரம் இது துணிச்சலான முயற்சி என்ற பாராட்டுக்களும் சேர்ந்தே வந்தன.

இந்த நிலையில் நடிகை ரேகா நாயர் இதில் அரை நிர்வாணமாக நடித்திருப்பதை விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக கூறப்படுகிறது.

குழந்தைக்கு பால் கொடுக்கும் காட்சியில் நடித்த ரேகா நாயர் மேலாடை விலகியப்படி நடித்திருந்தார். இதனை சினிமா நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரேகா நாயர் திருவான்மியூர் பீச்சில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை நிறுத்தி அவருடன் சண்டையிலீடுபட்டார்.

நான் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், உங்களுக்கு என்ன என்று கேட்ட அவர், பயில்வான் ரங்கநாதனை நோக்கி காட்டமான சில வார்த்தைகளை பயன்படுத்தி கத்தினார்.

இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.ஆடையில்லாமல் நடிப்பது என் விருப்பம் என்ற ரேகா நாயர், உனக்கு என்ன வந்தது? செருப்பு பிஞ்சுரும் என ஆவேசமாக கத்தினார்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment