குத்திப் பார்த்தவர் கையை இழந்தார்!

Date:

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் ஊழியர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஒருவர் நேற்று (22) மதியம் உணவு அருந்திவிட்டு கை கழுவும் போது நிலத்தில் பொருள் ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

அதனை எடுத்து நிலத்தில் குத்திப் பார்த்தபோது வெடித்து சிதறியுள்ளது. இதன்போது குறித்த நபரின் கை சிதறி படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்