இன்றும் பழைய கட்டணத்திலேயே புகையிரத டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய முடியும் என புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத கட்டணத்தை மாற்றியமைப்பதை இன்னும் எதிர்க்கிறோம் என்று புகையிரத நிலைய அதிபர் சங்க தலைமைச் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
புகையிரத கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் 60 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை விட கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
15 ரூபா டிக்கட் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது 125 வீத அதிகரிப்பாகும் எனவும் சாமர தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1