இலங்கையின் பிரதமராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதமராக அவர் இன்று(22) கொழும்பு மலர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். குணவர்தன 1983 முதல் இடதுசாரி மகாஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவராக உள்ளார்.
தினேஷ் குணவர்தன 1983 இடைத்தேர்தலில் மஹரகம நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.