29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
இலங்கை

ரணில் பதவியேற்ற போது மின் தடை; நேரலை ஒளிபரப்பு நிறுத்தம்: சி.ஐ.டியிடம் விசாரணை ஒப்படைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

அரச தொலைக்காட்சியான சுதந்திர தொலைக்காட்சி வலையமைப்பு (ஐடிஎன்) நேரலையாகவும், அதன் மூலம் மற்ற தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததையடுத்து நேரடி ஒளிபரப்பு தடைபட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் மின் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களுக்குள் ஜெனரேட்டர்கள் தானாக இயங்குவது வழக்கம் எனவும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போது சுமார் பத்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவை நேரலையில் ஒளிபரப்ப அரசு தொலைக்காட்சியால் முடியவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 11 வயது மகன் பலி

Pagetamil

கொழும்பிலிருந்து நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் கைது!

Pagetamil

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment