29.3 C
Jaffna
April 11, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி: இத்தாலி பிரதமர் பதவிவிலகினார்!

பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியா டிராகி இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இத்தாலியில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 2021ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார். பொருளாதார நெருக்கடி காரணமாக இத்தாலியில் எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் அதிகரித்து வருகிறன்றன. இதன் காரணமாக இத்தாலி மோசமான பொருளாதார நிலையை எதிர்கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மரியா டிராகிக்கு எதிராக கூட்டணி கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் இதனை 3 கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. 5 நட்சத்திர முன்னணி என்ற கூட்டு கட்சி, பிரதமருக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்தது.

அதேவேளையில், தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என்று மரியா டிராகி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

கூட்டணி இழுபறிகளால், அவரை நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அறிவித்திருந்தார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மரியா டிராகி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியீட்டினார். அனைத்து கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து இந்த வெற்றியை பெற்றார்.

எனினும், திடீரென மீண்டும் 5 நட்சத்திர முன்னணி ஆதரவை விலக்கிக் கொண்டது.

இந்த நிலையில் இன்று அவர் தனது இராஜினாமாவை ஜனாதிபதி மாளிகையில் அளித்ததாகவும், அதனை ஏற்றுகொண்டதாகவும் இத்தாலி v செர்ஜியோ மேட்டரெல்லா அறிவித்திருக்கிறார்.

இராஜினாமா குறித்து டிராகி வெளியிட்ட அறிவிப்பில், “இந்தக் காலக்கட்டத்தில் நாம் இணைந்து செய்த அனைத்து பணிகளுக்கும் நன்றி. நான் எனது இராஜினாமாவை ஜனாதிபதியிடம் அளித்துவிட்டேன்” என்று தெரிவித்தார்.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!