25.4 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இலங்கை

பதவியேற்றதும் பாதுகாப்பு அமைச்சுக்கு பறந்த ரணில்!

முப்படைகளின் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று காலை பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சுக்கு விஜயம் செய்தார்.

அமைச்சுக்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வரவேற்றார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க அரச ஸ்தாபனத்திற்கு தனது முதல் விஜயத்தின் போது, நாட்டின் பாதுகாப்பு உயர் அதிகாரிகளை சந்தித்து சுருக்கமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

அமைச்சர் திரான் அலஸ், சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதையில் தள்ளாடும் பொலிசார்

Pagetamil

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சர்வதேச சட்ட ஆய்வு மாநாடு சனியன்று ஆரம்பம்!

Pagetamil

மூன்றாவது தடவையாகவும் இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் பாதிப்பு

Pagetamil

வத்திராயனில் பொறுப்பின்றி செயற்படும் உத்தியோகத்தர்கள்

east tamil

ஆவரங்கால் வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தரின் மரணம்

east tamil

Leave a Comment