நாட்டின் முன்னோக்கி செல்லும் பாதையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை வகுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, பொது மக்கள் பழைய அரசியலை விரும்பவில்லை எனவே பாராளுமன்றம் ஒன்றிணைந்து குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி செயற்பட வேண்டும் என்றார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் அவரும் 1973 ஆம் ஆண்டு இணைந்து தமது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்ததாக விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தனது வெற்றியை சபாநாயகர் அறிவித்தது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது வாழ்நாளில் 43 வருடங்கள் பாராளுமன்றத்தில் கழித்துள்ளதாகவும், தனக்கு இந்த கௌரவத்தை வழங்கியதற்காக பாராளுமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
31 வருடங்களுக்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இதேபோன்றதொரு நிலைமை ஏற்பட்டதாக ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
அப்போது வெற்றிக்கு பங்களித்த 15 எம்.பி.க்கள் தற்போது பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் டி.பி.விஜேதுங்க போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறினார்.
பாராளுமன்றத்தில் அரச தலைவரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட ஒரே சந்தர்ப்பம் இதுவாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி விக்ரமசிங்க, எனினும் கலந்துரையாடல் மூலம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட விக்ரமசிங்க, தனது வெற்றிக்காக உழைத்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேர்தலில் பங்குபற்றி வாக்களித்த ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.
நாடு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம் எனவும், நாட்டின் இளைஞர்கள் அமைப்பில் மாற்றத்தை கோருகின்றனர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உலகில் பல பிரச்சினைகள் இருப்பதாகவும், அதில் ஈடுபடாமல் இலங்கை முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.
சகல தடைகளையும் கடந்து புதிய வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆர் சம்பந்தன், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.




