மாற்றத்திற்கு எதிரான தரப்புடன் இருப்பதால் ரணிலுடன் பேச்சு நடத்த மாட்டோம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

Date:

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்தித்து பேச்சு நடத்துவதில்லையென தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பாராளுமன்ற அமர்வு முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தோம். அவர் கூறியுள்ள விடயங்களை எங்கள் மத்தியகுழுவிற்கு சமர்ப்பிப்போம். மத்தியகுழு இறுதி முடிவெடுக்கும்.

இன்று காலையும் சஜித் பிரேமதாச என்னை தொடர்பு கொண்டார். மீண்டும்  எமது ஆதரவை கேட்டிருந்தார்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவை நாம் சந்திக்கப் போவதில்லை. அவர் இன்று நடக்கும் மாற்றத்திற்கு நேர் எதிரான தரப்புடன் சேர்ந்து செயற்படுபவராக நாம் கருதுவதால், அவருடன் பேசியும் பலனில்லையென்ற முடிவிற்கு வந்துள்ளோம்.

தேசிய மக்கள் சக்தியினர் இன்று மதியம் எம்மை சந்தித்தார்கள். எமது மக்களின் அபிலாசைகளை ஏற்காத, அங்கீகரிக்காதவர்களை ஆதரிப்பது கடினமாக இருக்குமென அவர்களிடம் சொல்லியுள்ளோம்.

யாரை ஆதரிப்பது, அல்லது யாரையும் ஆதரிக்காமலிருப்பதா என்பதை எமது மத்தியகுழு இன்றும் நாளையும் கூடி முடிவெடுக்கும்.

இரண்டு வருடங்களின் முன்னர் அமைந்த, மக்களால் நிராகரிக்கப்பட்ட பாராளுமன்றத்திலேயே இந்த நாடகங்கள் அரங்கேறவுள்ளது. இதனால் உண்மையிலேயே மக்களின் தாகம் தீரப்போவதில்லை.

spot_imgspot_img

More like this
Related

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...

முன்னாள் நீதிபதி திலின கமகே சேவையிலிருந்து நீக்கம்!

ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத்...

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்