இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற ஜனாதபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை சிங்கப்பூர் அல்லது டுபாய் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய மாலைதீவில் தரையிறங்கினார். மாலைதீவு சபாநாயகர் முகமட் நசீர் அவரை வரவேற்று அழைத்து சென்றார். உல்லாசதீவு ஒன்றில் கோட்டா தம்பதி தங்க வைக்கப்பட்டனர்.
நசீர் மாலைதீவிலிருந்து தப்பியோடி வந்த போது, 2013ஆம் ஆண்டு அப்போதைய மஹிந்த அரசு தஞ்சமளித்திருந்தது.
இன்று கோட்டாபய மாலைதீவிற்கு சென்றதை தொடர்ந்து, மாலைதீவிலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் பெற்றது.
அவர் மாலைதீவின் ஊடாக வேறொரு நாட்டிற்கு சென்று தலைமறைவாக வாழ முடிவெடுத்திருந்தார். அந்த நாட்டிற்கு சென்று சேரும் வரை அவரது பதவிவிலகல் கடிதம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படாது, மாலையில் பாதுகாப்பான தங்குமிடத்தை அடைந்த பின்னர் இராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் கோட்டாபய இன்று மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் அல்லது மாலைதீவு செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.
அவரது அரசியல் தஞ்ச கோரிக்கையை சிங்கப்பூர்மற்றும் டுபாய்க்கு சமர்ப்பித்து பேச்சு நடத்தி வருகிறார்.
கோட்டாபயவின் பெருமளவான பணம் டுபாயில் முதலிடப்பட்டு, அங்கு அவருக்கு சொத்துக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.