நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஆதரவளிக்குமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பதில் ஜனாதிபதி விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைப்பினரிடமிருந்து தமக்குக் கிடைத்த ஆலோசனையின் அடிப்படையில்; மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நிலைமையைத் தணிக்க சுயாதீனமாக தீர்மானங்களை எடுப்பதற்காக பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக விரோத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளிக்க முடியாது என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சி தலைவர்கள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பது ஜனநாயக விரோதம் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.