வெளி பகுதிகளில் இருந்து கொழும்பை வந்தடைய வேண்டிய ரயில்கள் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்த பிரதமர் அலுவலகத்தினால் இது தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ரயில்கள் மூலமே கொழும்பை வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1