லிட்ரோ 12.5 kg சிலிண்டரின் விலை ரூ.4,910 ஆக அதிகரிப்பு; மின்கட்டண பட்டியலை சமர்ப்பித்து எரிவாயு பெறலாம்: பதுக்கலை தடுக்க நடவடிக்கை!

Date:

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 50 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.4,910க்கு கிடைக்கும்.

இன்று (11) முதல் தொடர்ந்து எரிவாயு விநியோகம் இடம்பெறும் எனவும், அதிக விலைக்கு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று (11) மற்றும் நாளை (12) கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும், ஜூலை 13 ஆம் திகதி முதல் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ தெரிவித்துள்ளது.

தேவையற்ற எரிவாயு பதுக்கல்களைத் தடுக்கும் வகையில் எரிவாயு கொள்வனவு செய்யும் போது மே மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தைச் சமர்ப்பிக்குமாறும் லிட்ரோ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எந்தெந்த இடங்களில் எரிவாயு கிடைக்கும் என்பது லிட்ரோ எரிவாயு நிறுவன இணையதளம் மூலம் தெரியப்படுத்தப்படும் என்று எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு விநியோகத்திற்கு சிறிலங்கா காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படை உதவி வழங்கப்படும் என்றும் லிட்ரோ அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்