Pagetamil
இலங்கை

இந்திய இராணுவத்தை அனுப்பி ராஜபக்சக்களின் ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றுங்கள்: இந்திய அரசுக்கு சுப்ரமணியன் சுவாமி ஆலோசனை!

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்புமாறு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரிந்துரைத்துள்ளார்.

“கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்? என்று ருவிற்றரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“அப்படியானால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்சே விரும்பினால் நாங்கள் வழங்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

சுப்பிரமணியம் சுவாமி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கையூட்டல் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

east tamil

ஆய்வு கூட பரிசோதனையில் வெடிப்பு: 12 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

திருகோணமலையில் திலீபனின் ஊர்தி தாக்குதல் தொடர்பில் மீண்டும் விசாரணை

east tamil

யோஷித ராஜபக்ச கைது

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment