வவுனியாவை சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர்!

Date:

இரண்டு சிறுவர்கள் அடங்கலாக மேலும் 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

இரண்டு சிறுவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 41 வயதுடைய பாலசுகந்தன், 35 வயதுடைய அனுஜா, 10 வயதுடைய பிரசன்னா, 08 வயதுடைய மேனலக்சன் எனும் ஒரு குடும்பமும், 38 வயதுடைய லிங்கேஸ்வரன், 40 வயதுடைய பிரதாம்பிகை எனும் மற்றுமொரு குடும்பமும் இதில் அடங்குகிறது.

நேற்று (10) இரவு 08 மணிக்கு தலைமன்னாரில் இருந்து, பைபர் படகில் இவர்கள் தமிழகம் சென்றுள்ளதாகவும், அதற்காக இலங்கை ரூபாவில் நான்கு லட்சம் கொடுத்துள்ளதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள 1ஆம் தீட்டை பகுதியில் 11ஆம் திகதியான இன்று காலை 07.00 மணிக்கு சென்றடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்