Pagetamil
முக்கியச் செய்திகள்

புலம்பெயர் தமிழர்களின் உதவியை ஒருங்கிணைக்க பொதுக்கட்டமைப்பு: தமிழ் தேசிய கட்சிகள், புலம்பெயர் தரப்புக்கள் கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், புலம்பெயர் அமைப்புக்களை உள்ளடக்கிய இணையவழி கலந்துரையாடல் நேற்று (10) மாலை இடம்பெற்றது.

புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் வடக்கு, கிழக்கில் பொதுக்கட்டமைப்பு ஒன்றின் ஊடாக அனுப்பும் செயற்திட்டம் பற்றிய கலந்துரையாடல் கூட்டமே இது.

வடக்கு கிழக்கில் பொதுக்கட்டமைப்பொன்றை உருவாக்கி, இலங்கையில் பதிவு செய்யப்பட்டு, அதன் ஊடாக புலம்பெயர் தமிழர்களின் உதவிகளை வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் பெற்றுக்கொள்வது தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது.

கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், க.வி.விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம், பொ.ஐங்கரநேசன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன்  உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

நேற்றைய முதலாவது கலந்துரையாடலில், இந்த திட்டம் குறித்து தத்தமது யோசனைகளை ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளளும்படி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உநப்பினர்கள் இருவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து,கட்சியின் மத்தியகுழுவை கூடி, ஆராய்ற்து சொல்வதாக பதிலளித்தி;தனர். சில நாட்களின் பின்னர் ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டமுன்னணியினர், 13வது அரசியலமைப்பை ஏற்ற கட்சிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை என்றும் தீர்மானித்ததாக அறிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

Leave a Comment