26.4 C
Jaffna
December 14, 2024
Pagetamil
இலங்கை

சஜித், டலஸ் பெயர்கள் முன்மொழிவு: கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  13ஆம் திகதி பதவி விலகியதன் பின்னர் புதிய ஜனாதிபதியாக நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

பாராளுமன்றத்தில் பிளவை ஏற்படுத்தாமல் உடன்படிக்கையின் மூலம் இந்த இருவரில் ஒருவரை ஜனாதிபதியாக நியமிப்பது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

இது தொடர்பான விஷேட கலந்துரையாடல் நேற்று (10) பிற்பகல் நுகேகொடையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் வீட்டில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான பெரமுன சுயேச்சைக் குழு, ஒன்பது கூட்டுக் கட்சிகள் அடங்கிய குழு  உட்பட பல கட்சிகள் மற்றும் குழுக்களிடையே நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதில் பங்கேற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல், பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தில் பிளவை ஏற்படுத்தாமல் இந்த இருவரில் ஒருவரை ஜனாதிபதியாகவும் மற்றையவரை பிரதமராகவும் நியமிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கட்சி சாராத கரு ஜயசூரிய, சாலிய பீரிஸ் போன்றவர்களில் ஒருவரை ஜனாதிபதியாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. எனினும், இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

இதேவேளை, ஒன்பது கூட்டுக் கட்சிகள் அடங்கிய குழு நேற்று காலை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் கூடி இது தொடர்பில் கலந்துரையாடியது.

அத்துரலிய ரதன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, பிரேமநாத் டோலவத்த, மொஹமட் முஸம்மில் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு வற்புறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (11) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச நாளை மறுதினம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் எனவும் புதிய ஜனாதிபதியை நியமிக்க பாராளுமன்றம் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் கூடும் எனவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஜனாதிபதி பதவிக்கு டலஸ் அழகப்பெருமவின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘சிலர் படித்தவர்கள்தான். ஆனால், புத்தி….’: அர்ச்சுனாவை பற்றி நாடாளுமன்றத்தில் போட்டுடைத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

Pagetamil

அரசாங்கத்தை தர்மசங்கடப்படுத்த சில குழுக்கள் முயற்சி!

Pagetamil

நாடளுமன்றத்துக்குள்ளும் தொடரும் அர்ச்சுனாவின் பரபரப்பு வித்தை: அநாகரிகமாக நடந்ததாக சபாநாயகரிடம் முறைப்பாடு!

Pagetamil

23 இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Pagetamil

18 இந்திய மீனவர்கள் கைது!

Pagetamil

Leave a Comment