ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இராணுவம் வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இராணுவத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்களை வளாகத்திற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்காக வானத்தை நோக்கியும், பிரதான நுழைவு வாயிலின் பக்கவாட்டு சுவரை நோக்கியும் இராணுவத்தினர் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானத்திலும் பக்கவாட்டு வாயிலின் சுவரிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியது குழு உள்ளே நுழைவதைத் தடுக்கும் ஒரு தந்திரமாகவே பயன்படுத்தப்பட்டது என்றும், அது எந்த வகையிலும் முற்றுகையாளர்களுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் முயற்சி அல்ல என்றும் இராணுவம் மேலும் வலியுறுத்துகிறது.