26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

எரிபொருள் கப்பல்கள் வரும் திகதிகள்: அமைச்சர் காஞ்சன தகவல்!

எரிபொருள் இறக்குமதி தொடர்பான புதிய தகவல்களை எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று வெளியிட்டுள்ளார்.

அவரது ருவிற்றர் பதிவின்படி,

15-17ஆம் திகதிகளிற்குள் வரும் டீசல் கப்பலிற்கும், 22-24 ஆம் திகதிகளிற்குள் வரும் பெட்ரோல் கப்பலிற்கும் மத்திய வங்கியின் உதவியுடன் எரிசக்தி அமைச்சினால், ஐஓசி நிறுவனத்திற்கு முழுமையான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

15-17 ஆம் திகதிகளிற்குள் வரும் டீசல் கப்பலிற்கும்,  17-19 ஆம் திகதிகளிற்குள் வரும் பெட்ரோல் கப்பலிற்கும் கடந்த வாரம் முன்பணம் செலுத்தப்பட்டது. டீசலுக்கான இருப்புத்தொகையை இன்று செலுத்த வேண்டும். பெட்ரோலுக்கு மீதித் தொகையை 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செலுத்த வேண்டும்.

மேலும் 3 கப்பல்கள் கொழும்பிற்கு வரும், 12-15 ஆம் திகதி டீசல், 14-16 ஆம் திகதி கனரக எரிபொருள் எண்ணெய் மற்றும் 15-17 ஆம் திகதி கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் வரும். அவை வந்தவுடன் பணம் செலுத்தப்பட வேண்டும்.

9 ஆம் திகதி எரிபொருள் ஏற்றியபடி வரவிருந்த கப்பல் வானிலை காரணமாக தாமதமானது. சரியான நேரத்தில் ஏற்ற முடியவில்லை. அந்த கப்பல் இன்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டதாக விநியோகத்தர் தெரிவித்தார். அது 12-15 ஆம் திகதிகளில் வந்தடையும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

Leave a Comment