ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபரால் சுடப்பட்டார். இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர் பின்புறம் இருந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நரா நகரில் அபே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மேலவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அந்த நபர் பின்னால் இருந்து சுட்டார். இரண்டு குண்டுகள் பாய்ந்தது. இதில் அபே அப்படியே சரிந்து விழுந்தார். அவருடைய உடல்நிலை குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவர் சரிந்து விழும் வீடியோக்கள், மீட்பு வீடியோக்கள், ஏரியல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
安倍晋三撃たれる瞬間 pic.twitter.com/OOpIYuEed7
— りりぃ (@llp78r) July 8, 2022
தாக்குதல் நடத்திய 41 வயதானவர் கைதாகியுள்ளார்.