25.6 C
Jaffna
December 14, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான யப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்!

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தள்ளார்.

படுகாமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வ்ந்த அவர், உயிரிழந்து விட்டதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ஜப்பானின் நீண்ட காலம் தலைவராக இருந்த அபேக்கு வயது 67. ஜப்பான் நேரம் மாலை 5:03 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மேல்சபைத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கு நகரமான நாராவில் வீதியில் உரை ஆற்றிக்கொண்டிருந்தபோது சுமார் 11:30 மணியளவில் அபே சுடப்பட்டார். அவர் ஹெலிகொப்டர் மூலம் நாரா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் கூற்றுப்படி, அபேக்கு  வலது கழுத்து, இடது மார்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்தது.

தாக்குதல் நடத்தியவர் உள்ளூர்வாசி டெட்சுயா யமகாமி என அடையாளம் காணப்பட்ட 41 வயதுடைய நபரை கைது செய்தனர்.

சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரி ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படையின் முன்னாள் உறுப்பினர் என்று ஜப்பானிய செய்தி நிறுவனமான கியோடோ செய்தி வெளியிட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

பல இலட்சம் கோடி சொத்தை உதறிவிட்டு பௌத்த பிக்குவான இலங்கைத் தமிழரின் மகன்!

Pagetamil

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி

Pagetamil

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்: பின்னணியும் தாக்கமும் என்ன?

Pagetamil

Leave a Comment