இலங்கை போக்குவரத்து சபை இன்று நண்பகல் 12.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்கமே இந்த போராட்டத்தை அறிவித்துள்ளது.
நாளை நடக்கவுள்ள அரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை தடுக்கவே இந்த பணிப்புறக்கணிப்பு நடைபெறுவதாக ஏனைய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் தாம் ஈடுபட போவதில்லையென ஏனைய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதனால் வடக்கிலுள்ள தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் இணையவில்லை. எனினும், காரைநகர் சாலை மட்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியாவிலிருந்து அக்கரைப்பற்று, திருகோணமலை போன்ற தூர இடங்களிற்கு மட்டும் சேவை இடம்பெறுகிறது. வடக்கிற்குள் நாளை வழக்கம் போல சேவை இடம்பெறும், கொழும்பு பயணத்தை பாதுகாப்பு காரணங்களினால் நிறுத்தியுள்ளதாக இ.போ.ச வட்டாரங்கள் தெரிவித்தன.